Thursday, January 9, 2014

அழகான ராட்சஸியே ' 02

அழகான ராட்சஸியே..!

அழகான பகுதி ' 02


நான் வீட்டுக்கு போர நேரம்.,எப்பவும் தெருவே காலியா இருக்கும்..

ஆனா..

இன்னிக்கு..


இன்னிக்கு தெருவே கூடி நின்னு ஒரு வீட்ட உத்து உத்து பாத்துகிட்டு இருக்குது.,
அது என்னோட வீடு தான்..

நான் பதறி அடிசிக்கிடு உள்ளே போனேன்..

பயந்த மாதிரியே என் அம்மா இறந்து போயிருக்காங்க.,
அதனால் கூட்டம் கூடி பாத்துகிட்டு இருக்காங்க..

இந்த அக்கம் பக்கத்தினரே அப்படிதான்.,
தனக்குன்னு வந்தா மட்டும் அது தலை வலி,
மத்தவங்களுக்கு வந்தா அது சும்மா நடிப்பு..

எனக்கு யாருமே சொல்லி கூட அனுப்பல பாருங்க..

என் அம்மாக்கு பல வருடங்களாக புற்றுநோய் இருந்துது.,
அதுக்கு ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டு தான் இருந்தோம்..

எனக்கு நல்லா தெரியும்,என் அம்மா ரொம்ப நாள் உயிரோட இருக்க மாட்டாங்கன்னு..

என் அம்மா படுத்த படுக்கையா மாச கணக்குல இருந்தவங்க..

அவங்க இல்லாம போனதே எனக்கு சந்தோஷம் தான்.,
தினமும் அவங்க என் கண்ணு முன்னாலேயே கஷ்டபடுறத பாக்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு..!

அவங்க இல்லாமலே கூட நான் தனியா வாழ்ந்து தானே ஆகணும்..!

அவங்க இந்த உலகத்துல இல்லன்னு நானும் போய்ட்டேன்னா இத்தனை வருஷம் என்ன கஷ்டப்பட்டு அவங்க வளத்தது வேஸ்ட் தானே..?

பெத்த புள்ளைங்க அழுவுறத பாத்து ஒரு தாய் வேணும்னா சந்தோஷபடுவா.,
ஆனா எந்த பிள்ளையும் தாய் அழுதா பாத்துட்டு சும்மா இருக்காது..

நான் நினைக்குறதும் சொல்றதும் சரி தானே..?

நீங்களே நியாயத்த சொல்லுங்க..


தொடரும்../-

#AlagaanaRaatchasiye