வாடா தயிர்சாதம் : அத்தியாயம் ‘ 01
ஒருகையில் இடுப்பிலிருந்து நழுவும் கால் சட்டையைப் பிடித்துக் கொண்டு இன்னொருகையால் நோட்டை விலாவோடு அணைத்தவாறு வகுப்பிற்குள் நுழைந்தான் ராஜா..
நான்காம் வகுப்பு இன்னும் நிறையவில்லை. இரண்டொரு மாணவர்கள் அவசர அவசரமாகவீட்டுப் பாடம் எழுதிக் கொண்டிருந்தார்கள். இந்த அவசரம் ராஜாவுக்கில்லை.வீட்டுப் பாடத்தை அச்சடித்தாற்போல எழுதிக்கொண்டு வந்துவிட்டான்.
மணியடித்து, பிரேயர் முடிந்த பின் வகுப்புத் தொடங்கும்; அதற்கு இன்னும்நேரமிருந்தது. ராஜா வகுப்பின் நடுவில் நின்று அப்படியும் இப்படியும்பார்த்தான். பிறகு சற்றே குனிந்து நோட்டை கீழே வைத்துவிட்டு நழுவும் சட்டையை இழுத்துக் கட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டான்.
அவன் மேல் சட்டை,கால் சட்டை எல்லாம் காக்கி. அதைத்தான் எப்போதும்போட்டுக் கொண்டிருப்பான். ராணுவத்துக் கொடுக்கப்படும் காக்கி அது.பிரித்துச் சிறியதாகச் சட்டை தைத்ததின் அடையாளங்கள் எப்போதும் அதில்தெரியும். சண்டை வந்தால் சக மாணவர்கள் அவனிடம் அதைச் சொல்லி பரிகாசம்செய்வார்கள். அவர்கள் குரல் ஓங்க ஓங்க அவனுக்கு ஆத்திரம் வரும்; கோபம் வந்தால் முகம் வீங்கும்; வலது பக்கத்திலிருந்து இடது பக்கத்திற்கு வாய் கோணக் கோண இழுக்கும். ஏற்கெனவே அவன் தெத்துவாய். இப்போது சுத்தமாக ஒருவார்த்தையும் வராது.
'தெத்துவாயா ' 'என்று தான் சார் கூப்பிடுவார்.
'தயிர்சாதம்' என்று மற்றவர்கள் கூப்பிடுவார்கள்..
சாருக்கும் அவனுக்கும் ஒரு ராசி. கெட்ட ராசி. ஒருத்தரை ஒருத்தருக்குப் பிடிக்காது. ஆசிரியரைப் பார்க்கும் போதெல்லாம் தன் தகப்பனாரைப் பார்ப்பது போல இருக்கும் அவனுக்கு. உறுமுவான். 'சாரைக் கொன்னு போடணும். உட்கார்றநாற்காலியிலே முள்ளு வைக்கணும். நல்ல கருவேல முள்ளா, சப்பாத்தி முள்ளாகொண்டாந்து வைக்கணும் ' ' என்று சொல்லிக் கொள்ளுவான். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் அவன் நடத்தை விபரீதமாக மாறும்.
மீண்டும் வருவான்...
This email has been checked for viruses by Avast antivirus software. |